கனடாவில் பணி செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மற்றுமொரு பயனுள்ள செய்தி

Canada Employees foreigners
By Balamanuvelan Apr 11, 2022 10:40 AM GMT
Report

தற்காலிக வெளிநாட்டுப் பணியார்களை எளிதில் பணிக்கமர்த்தும் வகையில், கனடா சில புதிய விதிகளை அமுல்படுத்தியுள்ளது. 

கனடாவில் பணியாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஏப்ரல் 4ஆம் திகதி இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கனடாவில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று, காலியிடங்களை நிரப்ப, கனேடியர்கள் கிடைக்காத இடங்களை, தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு நிரப்புவது.

இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தில்(Temporary Foreign Worker Program - TFWP) ஐந்து முக்கிய மாற்றங்கள் உடனடியாகக் கொண்டுவரப்பட உள்ளன.

அவையாவன:

1. தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு (Labour Market Impact Assessments - LMIAs) செல்லத்தக்க காலகட்டம், ஒன்பது மாதங்களிலிருந்து 18 மாதங்களாக உயர்த்தப்படுகிறது.

2. உயர் ஊதிய மற்றும் அதிக திறன் வாய்ந்த வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான (High-Wage and Global Talent Stream workers) அதிகபட்ச பணிக்காலம், இரண்டு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

3. இவை போக, 2015ஆம் ஆண்டு முதல், நடைமுறையில் இருந்துவரும் Seasonal Cap Exemption, நிரந்தரமாக்கப்பட உள்ளது. அதாவது, பழங்கள் மற்றும் காய்கறிப் பண்ணைகளில் வேலை, மீன் பண்ணைகளில் வேலை போன்ற, சீஸன்களில் மட்டும் செய்யப்படும் குறைந்த ஊதிய வேலைகளுக்கான காலியிடங்களுக்கு, இனி இத்தனை தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்குத்தான் வேலை என்ற கட்டுப்பாடு கிடையாது. அத்துடன், பணிக்காலமும், ஆண்டொன்றிற்கு 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தப்படுகிறது.

ஏப்ரல் 30 முதல் மேலும் சில விதிகள் அமுலுக்கு வருகின்றன...

4. அதிக அளவில் பணியாளர்கள் தட்டுப்பாடு உள்ளது என்பதை நிரூபித்துக்காட்டும் துறைகளில், பணி வழங்குவோர், ஆண்டொன்றிற்கு தங்கள் பணியாளர் தேவையில் 30 சதவிகிதத்தை, குறை ஊதிய தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ளலாம். உணவு உற்பத்தி, மரப்பொருட்கள் மற்றும் அவை தொடர்பான பொருட்கள் தயாரிப்பு, தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள், கட்டுமானத்துறை, மருத்துவமனைகள் மற்றும் செவிலியர் மற்றும் முதியோர் சேவை ஆகிய துறைகள், இந்த விதிமுறைக்குத் தகுதி பெற்றவை ஆகும்.

5. கடைசியாக, 6 சதவிகிதம் மற்றும் அதற்கு அதிக அளவில் வேலையின்மை வீதம் நிலவும் பகுதிகளில், தங்குமிடம் மற்றும் உணவு சேவை, மற்றும் சில்லறை வர்த்தகம் தொடர்பான குறை ஊதிய பணிகளில், தானாக தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு விண்ணப்பங்களை ஏற்க மறுக்கும் தற்போதைய கொள்கையை கனடா முடிவுக்குக் கொண்டு வர உள்ளது.

ஆண்டொன்றிற்கு 50,000 முதல் 60,000 வெளிநாட்டு விவசாயப் பணியாளர்கள் கனடாவில் பணி செய்ய வருகிறார்கள். அவ்விதம் பணிக்கு வரும் வெளிநாட்டுப் பணியாளர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் மூலமாகத்தான் கனடாவுக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US