15 பேர் உயிரை காவு வாங்கிய அதே பகுதி! இலங்கையில் மற்றொரு சாலை விபத்து
இலங்கையில் வெல்லவாய-தனமல்வில பிரதான சாலையில் லொறியும் மற்றொரு மோட்டார் வாகனமும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர விபத்து யாலபோவ டிப்போவுக்கு எதிரில் இன்று காலை ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்! சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்
15 பேர் உயிரை வாங்கிய விபத்து
இதற்கிடையில் வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் மொத்தம் 34 பேர் பயணித்த நிலையில், 15 பேர் உயிரிழந்து இருப்பதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் பயணி ஒருவர் காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சென்ற தனியார் சுற்றுலா பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு சொகுசு காரில் மோதி பள்ளத்தில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |