மிரட்டும் AI தொழில்நுட்பம்: மீண்டும் திரைக்கு வரும் எம்.ஜி.ஆர் (வீடியோ)
தற்போது AI தொழில்நுட்பம் மூலம் எம்.ஜி.ஆரை ரசிகர்கள் மீண்டும் திரைக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
AI தொழில்நுட்பம்
தற்போது AI தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் ஆச்சரியமான சில விஷயங்களையும் அது செய்து வருகிறது.
அந்த வகையில், ‘ஜெயிலர்’ பட காவால பாட்டிற்கு சிம்ரனை ஆட வைத்தது, ''ஜெயிலர்'' படத்தில் ரஜினியின் பாடல் ஒன்றில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. குரலைப் பயன்படுத்தியது போன்றவை.
தற்போது AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த எம்.ஜி.ஆரை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
எம்.ஜி.ஆர் வீடியோ
அந்த வகையில், தற்போது மக்களுக்குப் பிடித்த நாயகனாக திரையிலும் அரசியலிலும் வலம் வந்த எம்.ஜி.ஆரை AI தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
''கண்போன போக்கிலே கால்போகலாமா'' எனப் பாடிக் கொண்டு எம்.ஜி.ஆர். திரையில் வர ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
MGR 2.0 💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 29, 2023
pic.twitter.com/pAyqlC02ct
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடீயோவிற்கு ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களையும், அவர்களின் மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |