நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் மீது விமர்சனம்: போனி கபூரின் முதல் மனைவியின் மகள்
நடிகை ஸ்ரீதேவி, போனி கபூரின் இரண்டாவது மனைவி என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
ஆனால், அவரது முதல் மனைவியின் மகள் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
போனி கபூரின் முதல் மனைவி, மகள்
போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்யும் முன் மோனா ஷௌரி என்னும் பெண்ணை திருமணம் செய்திருந்தார்.
1996ஆம் ஆண்டு போனி கபூரும் மோனாவும் பிரிந்தனர். தம்பதியருக்கு அர்ஜூன் கபூர் என்னும் மகனும் அன்ஷுலா கபூர் என்னும் மகளும் இருக்கிறார்கள்.
நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் மீது விமர்சனம்
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள், அதாவது தன்னுடைய சித்தி மகள்கள் ட்ரோல் செய்யப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அன்ஷுலா.
ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில், அவர் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறார்.
அவரது தங்கையான குஷி கபூரும் இப்போது திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள நிலையில், அவரும் ட்ரோல் செய்யப்படுகிறார்.
தங்கள் தாய் ஸ்ரீதேவியைப்போலவே மகள்களும் முக அழகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்களா என்பது முதல், அவர்களுடைய தாயுடைய நடிப்புடன் ஒப்பிடப்பட்டும் அவர்கள் விமர்சிக்கப்பட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், தன் தங்கைகள் விமர்சனத்துக்குள்ளாவது தனக்குக் கவலையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் அன்ஷுலா.
நேர்மறையான விமர்சனங்கள் பயனளிக்கும், ஆனால், எதிர்மறையான விமர்சனங்கள் ட்ரோல் செய்வதற்கு சமம் என்கிறார் அன்ஷுலா.
என்றாலும், தன் தங்கைகள் தைரியமானவர்கள், இனிமையானவர்கள் என்கிறார் அன்ஷுலா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |