அவுஸ்திரேலியா தேர்தல்; தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் ஆகும் அந்தோணி அல்பனீஸ்
அவுஸ்திரேலியாவில் இன்று 150 நாடாளுமன்ற இடங்களுக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில், பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சிக்கும், எதிக்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மொத்தமுள்ள 150 இடங்களில், ஆட்சியை பிடிக்க 76 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
மீண்டும் பிரதமரான அந்தோணி அல்பனீஸ்
இன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 2வது முறையாக ஆளும் தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
22 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள முதல் அவுஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையை அந்தோணி அல்பனீஸ் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்றுள்ள அந்தோணி அல்பனீஸ்க்கு, எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தனது டிக்சன் தொகுதியில் 22 வருடங்களுக்கு பின்னர், முன்னாள் பத்திரிகையாளரான அலி பிரான்ஸ் என்பவரிடம் தோல்வியை தழுவியுள்ளார்.
Congratulations, @AlboMP on your election win.
— Keir Starmer (@Keir_Starmer) May 3, 2025
The UK and Australia are as close as ever — and we will continue to work together to deliver a brighter future for working people in both of our countries. pic.twitter.com/jXG44lddAk
தொடர்ந்து 2வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட அந்தோணி அல்பனீஸ்க்கு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |