AI உருவாக்கிய கோப்புகளை கண்களுக்கு தெரியாத Watermarks - Anthropic புதிய முயற்சி
Anthropic Adds Invisible AI Watermarks: AI உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க கண்களுக்கு தெரியாத குறியீடே Anthropic அறிமுகம் செய்கிறது.
அமெரிக்க AI நிறுவனம் Anthropic, தனது Claude AI மாடல்களில் Invisible Watermark தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் AI உருவாக்கிய உரைகள் மற்றும் கோப்புகளை எளிதில் அடையாளம் காண முடியும். இந்த Watermarks, சாதாரணமாக மனிதர்களால் காண முடியாத, ஆனால் இயந்திரம் வாசிக்கக்கூடிய குறியீடாக இருக்கும்.

Claude AI உருவாக்கும் உரைகளில், இந்த மறை குறியீடு தானாகவே சேர்க்கப்படும். உரையை copy-paste செய்தாலும், சில திருத்தங்கள் செய்தாலும் கூட, அந்த Watermark நீங்காமல் இருக்கும்.
EU AI Act
இது ஐரோப்பிய ஒன்றியத்தின் EU AI Act-இன் வெளிப்படைத்தன்மை விதிகளின் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 2, 2026 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியிடப்படும் Claude மாடல்கள் அனைத்தும் இந்த Watermark வசதியுடன் இருக்கும்.
உலகளாவிய அளவிலும் இதை விரிவாக்க Anthropic திட்டமிட்டுள்ளது. உரை மட்டுமல்லாமல், PNG, JPG, SVG போன்ற கோப்புகளிலும் Claude, C2PA standard அடிப்படையில் டிஜிட்டல் கையொப்ப metadata-ஐ சேர்க்கும். இதன் மூலம் கோப்புகள் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியும்.
எச்சரிக்கை
ஆனால் Anthropic, “Watermark இருப்பது AI உருவாக்கியது என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தாது” என எச்சரிக்கிறது.
ஏனெனில், ஒருவரின் சொந்த எழுத்தை Claude proofread, translate அல்லது summarize செய்தாலும், அந்த உரையில் Watermark தோன்றலாம். அதேபோல், பழைய மாடல்கள் அல்லது மிகச் சிறிய உரைகள் Watermark இல்லாமல் இருக்கலாம்.
இந்த முயற்சி, AI உருவாக்கிய உள்ளடக்கங்களை பொறுப்புடன் பயன்படுத்த மற்றும் தவறான தகவல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Anthropic, விரைவில் Watermark-யை கண்டறியும் கருவிகளை வெளியிடவுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |