ஏஐயால் 2030க்குள் மனிதகுலம் அழியும் - ஆந்த்ரோபிக்கிலிருந்து வெளியேறிய வல்லுநர் எச்சரிக்கை
anthropic researcher says ai could kill humans before 2030:செயற்கை நுண்ணறிவு எனஅழைக்கப்படும் AIயின் வளர்ச்சி நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.
ஏஐயால் 2030க்குள் மனிதகுலம் அழியும்
AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், எதிர்காலத்தில் AI மனிதர்களின் கட்டுப்பாடின்றி செயல்பட சாத்தியம் உள்ளதாக அச்சம் நிலவி வந்தது.
இந்நிலையில், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் இன்று ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக நான் ஓப்பன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.
இந்த இரண்டு நிறுவனங்களுமே பொறுப்புடன் செயல்படவில்லை. அவை தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் சூப்பர் இன்டெலிஜென்ட்ஸை உருவாக்குவதில் போட்டியிடுகின்றன.
I resigned from Anthropic today. I spent the last three years doing pretraining research at both OpenAI and Anthropic. Neither company is acting responsibly. They are racing straight to self-improving superintelligence and gambling with our lives. More thoughts below.
— Jacob Coxon (@hilbertspaess) September 9, 2026
இந்தத் தொழில்நுட்பத்தின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இவை விரைவில், எதையும் ஊடுருவி அறியக்கூடிய, ஒரே இரவில் எந்தத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய, உண்மையான சக்தியையும் வளங்களையும் பெறக்கூடிய மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக மாறும்.
இந்த AI ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம், மேலும் அந்த முன்னேற்றத்தின் வேகம் குறையவில்லை.
இந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவில் நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். இது ஒரு சந்தைப்படுத்தல் தந்திரம் அல்ல.
சொல்லப்போனால், பல நிர்வாகிகளும் மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகைகளில் தங்கள் வார்த்தைகளை அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசுவார்கள். ஆனால் அதே நபர்கள் AI குறித்த பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன்.
OpenA Iயில் பலர் இதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால். ஆந்த்ரோபிக்கில், அந்த அபாயங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் அதை முதலில் அடைவதற்கான ஒரு போட்டியில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
ஆந்த்ரோபிக்கின் சீரமைப்பு அறிவியல் தலைவரான இவான் ஹூபிங்கர், அடுத்த பத்தாண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து மனிதர்களையும் கொன்றுவிடுவதற்கான நிகழ்தகவு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகத் தனிப்பட்ட முறையில் மதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.
ஜேக்கப் காக்சன் AI எந்த முறையில் மனித குலத்தை அழிக்கும் என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள 2 நிறுவனங்களின் உள்ளே பணியாற்றியுள்ளவர் கூறியது மனிதர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |