புலம்பெயர்தலுக்கு எதிரான மசோதா தோல்வி: கலகலத்த ஜேர்மனி
கடந்த சில நாட்களாக புலம்பெயர்தல் தொடர்பான சில நடவடிக்கைகளால் ஜேர்மனியே கலகலத்துப்போனது.
புலம்பெயர்தலுக்கு எதிரான மசோதா
கடந்த புதன்கிழமை, ஜேர்மனியின் பிரதான எதிர்க்கட்சியான CDU கட்சி, புலம்பெயர்தல் மற்றும் புகலிட விதிகளை கடுமையாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்தது.
புலம்பெயர்தல் எதிர்ப்பு, வலதுசாரிக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சி அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க, ஜேர்மன் வரலாற்றில் முதன்முறையாக வலதுசாரிக் கட்சி ஒன்றின் உதவியுடன் பிரேரணை ஒன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றதால், வெளியே மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது, மக்கள் பேரணிகளில் இறங்கினார்கள்.
மீண்டும் ஒரு மசோதா
இந்நிலையில், புலம்பெயர்தல் தொடர்பிலான, ‘influx limitation law’ என்னும் சட்டம் தொடர்பான மசோதா ஒன்றை அதே CDU கட்சி கொண்டுவந்தது.
முந்தைய மசோதாவுக்கு ஆதரவாக AfD கட்சி வாக்களித்ததுபோலவே, இந்த மசோதாவுக்கும் ஆதரவளிக்க, மற்ற கட்சியினரும் மக்களும், எங்கே இந்த மசோதாவும் வெற்றிபெற்றுவிடுமோ என பதற்றம் அடைந்தார்கள்.
ஆனால், சிறிய வித்தியாசத்தில் influx limitation law மசோதா தோல்விடைந்துவிட்டது.
மசோதாவுக்கு எதிராக 350 வாக்குகளும், மசோதாவுக்கு ஆதரவாக 338 வாக்குகளும் கிடைக்க, மசோதா தோல்வியடைந்துவிட்டது.
அந்த மசோதா தோல்வியடைந்துவிட்டதால், புலம்பெயர்தல் ஆதரவாளர்கள், மக்களிலும், அரசியல்வாதிகளிலும், சற்றே நிம்மதி அடைந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |