அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வெடித்த போராட்டம்! ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி
அவுஸ்திரேலியாவின் முக்கிய பெரிய நகரங்களில் முடக்கநிலைக்கு எதிராக ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அவுஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நகரில் 4 வாரங்களாக முடக்கநிலை தொடர்கிறது.
இந்நிலையில், சிட்னி (Sydney), மெல்பர்ன் (Melbourne), பிரிஸ்பேன் (Brisbane), அடிலெய்ட் (Adelaide) ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளைப் புறக்கணித்து பேரணியில் ஈடுபட்டனர்.
மாநில அரசுகள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிட்னியில் அனுமதியின்றிப் பேரணியில் ஈடுபட்டவர்களில் 57 பேரை சிலரைக் காவல்துறை கைதுசெய்தது.
They’re interacting with the cars stuck in traffic on other side of the road. pic.twitter.com/L7Em2AQOOh
— Alyx Gorman (@AlyxG) July 24, 2021