ஜேர்மனியில் இளைஞர்கள் வீடுகளில் திடீரென நூற்றுக்கணக்கான பொலிஸார் அதிரடி சோதனை! பின்னணி என்ன?
ஜேர்மனியில் 5 இளைஞர்கள் வீட்டில் நூற்றுக்கணக்கான பொலிஸார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் குழுவால் ஈர்க்கப்பட்ட Bonn நகரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் வீட்டில் ஜேர்மன் பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது, 16 முதல் 22 வயதிற்குட்பட்ட 5 சந்தேகநபர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை.
சந்தேகநபர்களில் சிலர் சிறுவர்கள் என்பதால் சோதனை நடத்த மட்டுமே நீதிபதி அனுமதியளித்தார்.
5 பேர் இருவர் ஜேர்மன் குடிமகன்கள், மற்ற இருவர் ரஷ்யா-ஜேர்மன் என இரட்டை குடியுரிமை கொண்டவர்கள், ஒருவர் துருக்கியைச் சேர்ந்தவர்.
ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சந்தேக நபர்கள் ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் இளைஞர்களின் வீடுகளில் சோதனை செய்தனர்.
சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, சாத்தியமான விசாரணையில் சந்தேக நபர்களுக்கு எதிராக ஆதாரமாக பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அதிகாரிக்ள ஆய்வு செய்வார்கள் என வழக்கறிஞர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.