இந்த 6 ஆன்டி வைரஸ் செயலிகளை உடனே Smartphoneல் இருந்து நீக்கிடுங்க! எச்சரிக்கை செய்தி
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆன்டி வைரஸ் செயலிகள் சில மால்வேர்களை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது பிளே ஸ்டோரில் 6 புதிய செயலிகளில் பயனர்களின் லாகிங் தகவல்களை திருடும் மால்வேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் முக்கியமான அம்சம் இந்த செயலிகள் எல்லாம் வைரஸ்களை நீக்குவதாக கூறும் ஆண்டி வைரஸ் செயலிகள் என்பது தான்.
அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதை போல தான் இது! வைரஸைகளை போனில் இருந்து நீக்கவே ஆன்டி வைரஸ் செயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம், அந்த செயலியே வைரஸை கொண்டு வந்தால் என்ன தான் செய்ய முடியும்?
இதையும் படிங்க: வாட்ஸ் அப்பில் இனி புகைப்படம், வீடியோ தானாகவே டெலிட் ஆகும்! அசத்தலான புதிய அப்டேட்
அதன்படி Atom Clean booster antivirus, Antivirus super cleaner, Alpha antivirus cleaner, Powerful Cleaner, antivirus, Center Security Antivirus ஆகிய செயலிகள் மால்வேர்களை கொண்டுள்ளது.
இந்த செயலிகளை கூகுள் கண்டறிந்து நீக்குவதற்கு முன் 15,000க்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இது பயனர்களின் நம்முடைய யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது.
அதேபோல நாம் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து. நாம் வங்கி தொடர்பாக டைப் செய்துள்ள தகவல்களை எடுத்துகொள்ளக்கூடியது. இந்த மால்வேரால் பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.