கரீபியன் பிரீமியர் லீக்: முதல் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.
கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ரோவ்மன் பௌல்
செயின்ட் வின்சென்ட்டில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.
🚨 Andre Russell now has 100 CPL wickets 🔥🔥🔥pic.twitter.com/DmpR7zV7md
— Cricbuzz (@cricbuzz) August 8, 2026
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 167 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் ரோவ்மன் பௌல் 47 (37) ஓட்டங்களும், ரீஸா ஹென்ரிக்ஸ் 42 (25) ஓட்டங்களும் விளாசினர். அல்ஸரி ஜோஸப் 3 விக்கெட்டுகளும், உஸமா மிர் மற்றும் ஜேடன் சீல்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய ஆன்டிகுவா அணியில் டிம் ராபின்சன் 40 ஓட்டங்களும், தஜிந்தர் தில்லோன் 62 (37) ஓட்டங்களும் விளாசினர்.
ஆனால் பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சொதப்பினர். 20வது ஓவரின் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட, ஷாமர் ஸ்ப்ரிங்கர் ஆன்டிகுவா அணியை வெற்றி பெற வைத்தார்.
ஜமைக்கா தரப்பில் கீமோ பவுல் 3 விக்கெட்டுகளும், ரஸல் மற்றும் ஹுனைன் ஷா தலா 2 விக்கெட்டுகளும், ஹஸன் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
What a start to the CPL season 🤩🤩pic.twitter.com/PZmYLTgG3r
— Cricbuzz (@cricbuzz) August 8, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |