58 பந்துகளில் 114 ஓட்டங்கள் விளாசிய மாஸ்: முதல் முறையாக CPL மகுடம் சூடிய ஆன்டிகுவா
Antigua and barbuda falcons won 1st cpl title: CPL டி20 தொடர் கிண்ணத்தை ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் முதல் முறையாக வென்றது.
ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தி ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ், முதல் முறையாக CPL டி20 தொடர் கிண்ணத்தை கைப்பற்றியது.
மாஸ் சதாகத் வாணவேடிக்கை
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ் மென் அணிகளுக்கு இடையிலான CPL இறுதிப்போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
𝐒𝐨𝐚𝐫, 𝐅𝐚𝐥𝐜𝐨𝐧𝐬 𝐒𝐨𝐚𝐫! 🇦🇬🏆
— CPL T20 (@CPL) September 21, 2026
𝐓𝐡𝐞 𝐀𝐧𝐭𝐢𝐠𝐮𝐚 & 𝐁𝐚𝐫𝐛𝐮𝐝𝐚 𝐅𝐚𝐥𝐜𝐨𝐧𝐬 𝐚𝐫𝐞 𝐭𝐡𝐞 𝐑𝐞𝐩𝐮𝐛𝐥𝐢𝐜 𝐁𝐚𝐧𝐤 𝐂𝐏𝐋 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬2️⃣0️⃣2️⃣6️⃣!🇦🇬x🇯🇲#CPL26 #CPLFINAL #ABFvJK #CricketPlayedLouder pic.twitter.com/LGM16Cr7Uo
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணியில் மாஸ் சதாகத் (Maaz Sadaqat) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். ஆனால் மறுமுனையில் சைம் அயூப் (29) தவிர ஏனைய வீரர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ருத்ரதாண்டவம் ஆடிய மாஸ் சதாகத் 58 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் விளாச, ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 170 ஓட்டங்கள் எடுத்தது.
சூபியான் மோஹிம் 4 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோஸப் 2 விக்கெட்டுகளும், சீல்ஸ், சதாப் கான் மற்றும் ஷாமர் ஸ்பிரிங்கர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
முதல் முறையாக
பின்னர் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி, 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆமிர் ஜாங்கோ 34 பந்துகளில் 57 ஓட்டங்களும், ஹசன் நவாஸ் 35 பந்துகளில் 47 ஓட்டங்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி முதல் முறையாக கரீபியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது.