சீன அழகிக்கு தாலி கட்டிய தமிழன்: களைகட்டிய திருமண கொண்டாட்டம்
அமெரிக்காவில், சீன பெண்ணை காதலித்த ஆண்டிபட்டி மாப்பிள்ளைக்கு தேனியில் வைத்து திருமணம் நடந்தது.
தேனியில் திருமணம்
தமிழக மாவட்டமான தேனி, அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அமுதன் மற்றும் சரவணகுமாரி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை செய்வதற்காக சென்றார்.
பின்னர், அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகிறார். அமெரிக்கா குடியுரிமையையும் பெற்ற இவர் கிரீன் கார்டு பெற்று நிரந்தரமாக அங்கேயே குடியேறினார்.
இவருக்கு தருண்ராஜ் மற்றும் கிரண்ராஜ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், தருண்ராஜ் என்ற மகன் அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.
அதேபோல சீனாவை பூர்வீகமாக கொண்ட பீட்டர்ஜூ பிங்வூ தம்பதியினர் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவிலேயே சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுனோ ஜூ என்ற மகள் உள்ளார்.
இதில், தருண் ராஜ் என்பவரும் சுனோ ஜூவும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அமெரிக்காவில் வைத்து நிச்சயத்தை முடித்தனர்.
மணமகன் வீட்டார் இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரில் திருமணம் நடத்த வேண்டும் என்று கூறினர்.
இதனால், இவர்களது திருமணம் தேனி மாவட்டம் அமைச்சியாபுரம் கிராமத்தின் அருகே இருக்கும் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து பாரம்பரிய முறைப்படி நடந்தது.
அப்போது சமுதாய முறைப்படி சடங்குகள் நடந்தனர். பின்னர், மணமேடையில் வைத்து மணமகன் தருண்ராஜ் மணமகள் சுனோ ஜூவுக்கு தாலி கட்டினார்.
அங்கு கூடியிருந்த உறவினர்கள் அனைவரும் மணமக்களுக்கு பூ தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த திருமணத்தை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |