பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கிடைத்த பொருளால் லட்சாதிபதியாகிய பிரித்தானிய பெண்
பிரித்தானிய பெண் ஒருவர், தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக பழைய பொருட்களை விற்கும் கடை ஒன்றில், ஒரு மோதிரத்தை வாங்கியுள்ளார்.
ஒரு பவுண்டுக்கு அந்த மோதிரத்தை வாங்கிய அவர், அதை மீண்டும் விற்க முற்பட்டபோது, அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதை பார்வையிட்ட நிபுணர் ஒருவர், அது 1790க்கும் 1800க்கும் இடையில் செய்யப்பட்ட ஒரு மோதிரம் என்று தெரிவித்தார்.
அது ஒரு இந்திய மோதிரம் என்று கூறிய அந்த நிபுணர், அது 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரம் என்றும், 200 ஆண்டு காலத்துக்கு முந்தைய மொஹலாயர் காலத்து மோதிரமான அது, தாஜ்மஹாலுக்கு அருகில் எங்கோ ஒரு இடத்திலிருந்து பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அந்த மோதிரத்திலிருந்த கற்களை சோதித்தபோது, அந்த மோதிரத்தில் நடுவில் ஒரு கல்லும், அதைச் சுற்றி சிவப்பு நிற கற்களும் பதிக்கப்பட்டிருந்தன, அந்த சிவப்புக் கற்கள் மாணிக்ககற்கள் என்று கூறிய அந்த நிபுணர், அந்த மோதிரத்தில் நடுவிலிருந்த கல் என்ன என அறிவதற்காக, அதற்கான இயந்திரத்தில் வைத்து சோதிக்கும்போது மற்றொரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், அது ஒரு அபூர்வ வகை வைரக்கல்!
கடைசியில், அந்த பெண்ணுக்கு அந்த மோதிரத்தின் மதிப்பு எவ்வளவு என கூறப்பட்டபோது, ஆச்சரியத்தில் வாய் பிளந்துவிட்டார் அவர்.
ஆம், ஒரு பவுண்டுக்கு அவர் வாங்கிய அந்த மோதிரத்தின் மதிப்பு 2,000 பவுண்டுகள். (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ஐந்தரை லட்ச ரூபாய்).
ஆக, ஒரு பவுண்டுக்கு வாங்கிய மோதிரம் ஒன்று, அந்த பெண்ணை லட்சாதிபதியாக்கிவிட்டது!