இக்கட்டான சூழ்நிலை.., நஷ்டமடைந்த நிறுவனத்தை ரூ.31,869 கோடியாக மாற்றிய பெண் தொழிலதிபர்
குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும், பெண் தொழிலதிபர் ஒருவர் நஷ்டமடைந்த நிறுவனத்தை ரூ.31,869 கோடியாக மாற்றியுள்ளார்.
யார் இவர்?
மும்பையில், 1942 -ம் ஆண்டு ஆகஸ்ட் 3 -ம் திகதி பார்சி ஜோராஸ்ட்ரியன் குடும்பத்தில் பிறந்தவர் அணு அகா (Anu Aga). இவர், செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், Tata Institute of Social Sciences நிறுவனத்திலும் படித்துள்ளார்.
இவரது தந்தை நடத்தி வந்த வான்சன் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஹிண்டன் (Rohinton) என்பவரை 1965 -ம் ஆண்டு Anu Aga திருமணம் செய்தார். இந்த நிறுவனமானது 1980-ம் ஆண்டு தெர்மாக்ஸ் (THERMAX) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 1982 -ம் ஆண்டு ரோஹிண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, Anu Aga தெர்மாக்ஸ் (THERMAX) நிறுவனத்தில் HR பிரிவில் வேலை செய்தார். பின்னர், உடல்நலம் தேறி ரோஹிண்டன் பணியை தொடர்ந்த போதிலும், 1995 -ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தெர்மாக்ஸ் (THERMAX)
இதன்பின்னர், 1996 -ம் ஆண்டு தெர்மாக்ஸ் (THERMAX) நிறுவனத்தின் தலைவராக Anu Aga பொறுப்பேற்றர். ஆனால், அடுத்தடுத்து அவரது மாமியார், மகன் என இருவர் உயிரிழந்தனர்.
இதனால், உடைந்து போன Anu Aga -வின் நிறுவனமானது 1999 -ல் நஷ்டத்தை சந்தித்தது. இருந்தபோதிலும், மனம் தளராது உழைத்து நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு மாற்றினார். இதனையடுத்து, 2004 -ல் நிறுவனத்தில் இருந்து விலகி, பொறுப்பை தனது மகள் மெஹர் புதும்ஜியிடம் ஒப்படைத்தார்.
இதன்பிறகு, 2018 ஆகஸ்ட் வரை நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்தார். அடுத்து, முழுவதுமாக நிறுவனத்தில் இருந்து விலகி தற்போது சமூக சேவைகள் செய்து வருகிறார்.
போர்ப்ஸ் அறிக்கையின்படி, 2023 டிசம்பர் நிலவரப்படி Anu Aga -வின் சொத்து மதிப்பு ரூ.20,000 கோடியாகும். மேலும், தற்போது தெர்மாக்ஸ் (THERMAX) நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.31,869 கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |