ஆதிக்கம் செலுத்தும் தேசிய மக்கள் சக்தி: பெரும்பான்மையை நெருங்கும் கூட்டணி
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், தேசிய மக்கள் சக்தி 88 ஆசனங்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
25 ஆசனங்களே தேவை
இதனால் இலங்கை ஜனாதிபதி அனுராவின் கூட்டணியே பெரும்பான்மையைப் பெறும் என்பது முடிவாகியுள்ளது. செப்டம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 62 சதவிகித வாக்குகளுடன் இதுவரை 106 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
பெரும்பான்மைக்கு இன்னும் 25 ஆசனங்களே தேவை என்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற உள்ளது. தேசிய மக்கள் சக்தி தற்போது மாவட்ட அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளன. எஸ்.ஜே.பி 18 சதவிகித வாக்குகளைப் பெற்று 24 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் ராஜபக்ச குடும்பத்தாரின் எஸ்.எல்.பி.பி இதுவரை 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
150 ஆசனங்களைத் தாண்டும்
செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் தேசிய மக்கள் சக்தி கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
மட்டுமின்றி, தேசிய மக்கள் சக்தி கட்சி 150 ஆசனங்களைத் தாண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், 225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் என்றே நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |