11 ஆண்டுகளாக கோமாவில் தான்.. என்னுடைய மூன்றாவது குழந்தை போல! கண்கலங்கிய நடிகை அனுராதா
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டமான சம்பவங்களை பற்றி தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பிரபல நடிகை அனுராதா பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசியது
அவர் சேனலில் கொடுத்த பேட்டியில், "என்னுடைய கணவர் வேலை இல்லாத நேரத்தில் டேன்ஸ் யூனியன் சென்று அங்குள்ள நண்பர்களுடன் கேரம் போர்டு விளையாடுவார். பின்னர் வீட்டிற்கு குடித்து விட்டு வருவார்.
அதேபோல தான் அன்றும் விளையாடினார். பின்னர் எனக்கு போன் செய்து என்ன சமையல் என்று கேட்டார். நான் வஞ்சரம் மீன் என்று கூறினேன். அப்போது தீபாவளி வருவதற்கு மூன்று நாட்கள் இருந்தது.
அந்த நேரத்தில் அங்குள்ள ஒரு பையன் தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்குவதற்கு பணம் இல்லை என்று எனது கணவரிடம் கூறியுள்ளார். அவரும் அந்த பையனை அழைத்து டிரஸ் வாங்க பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது இருவரும் பேசிக்கொண்டே சென்ற போது சாலையில் உள்ள டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் எனது கணவருக்கு அடிபட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்குள்ள நண்பர்களின் உதவியுடன் அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் மருத்துவமனையில் இருந்து எனக்கு போன் வந்தது. நான் அங்கு சென்று பார்த்ததும் உங்கள் கணவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என கூறினர்.
கிட்டத்தட்ட 17 நாட்கள் மருத்துவமனையில் கோமாவில் இருந்தார். அவருக்கு மீண்டும் நினைவு வர அவருக்கு பிடித்த பாடல்களை ஒலிக்க செய்தேன்.
உங்களால் பார்த்துக்கொள்ள முடியாது என்று மருத்துவமனையில் என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி அவரை அழைத்து வந்து பார்த்துக்கொண்டேன்.
அவருடைய மருத்துவ செலவிற்காக என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்றேன். எனக்கு 2 குழந்தைகள் இருந்த நிலையில் 3-வது குழந்தையாக அவரை பார்த்துக் கொண்டேன்.
அப்படி தான் 11 வருடங்களாக பார்த்துக்கொண்டேன். பின்னர் ஒரு நாள் சாப்பிடும் போது இறந்துவிட்டார்" என்று கண்கலங்கியபடி பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |