கோலியின் ஆட்டத்தை பார்த்து ஆர்ப்பரித்த அனுஷ்கா சர்மா! வீடியோ
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கோலி அரைசதம் விளாசியத்தைப் பார்த்து அவரது மனைவி உற்சாக மிகுதியில் கொண்டாடினார்.
மும்பையில் நடந்து வரும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
நிதானமாக ஆடிய அவர் 53 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
கோலி அரைசதம் அடித்தபோது அவரது மனைவி அனுஷ்கா சர்மா உற்சாக மிகுதியில் கொண்டாடினார். கோலி அவரைப் பார்த்து பேட்டை அசைத்து அரைசதத்தை அவருக்கு சமர்ப்பிப்பதாக கூறிவிட்டு, வானத்தை நோக்கி கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.
King is back ♥️? 50 runs vs Gujarat ??@imVkohli @IPL #ViratKohli #KingKohli pic.twitter.com/EuYScBxNBI
— Neeraj Tiwari (@Mr_NeerajTiwari) April 30, 2022
முன்னதாக, கடந்த போட்டிகளில் கோலி பேட்டிங்கில் சொதப்பியதால் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற கருத்து பரவிய நிலையில், தற்போது தனது பேட்டிங்கின் மூலம் அது தவறு என்று நிரூபித்துள்ளார்.