ஒரு பைசா கூட செலவு இல்லை: அனுஷ்கா சர்மாவின் அழகின் ரகசியமும் இதுதானாம்!
இந்திய திரைப்பட நடிகையும், பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் மனைவியுமானவர் அனுஷ்கா சர்மா.
35 வயதிலும் இளமையாக 16 வயது பெண் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா தனது அழகின் ரகசியம் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், தான் எப்போதுமே ஆயுர்வேதம் மிக்க வேப்பிலையை அதிகம் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவில் சரும மற்றும் தோல் பராமரிப்புக்கு வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோம்.
Neem Face Pack
- சுருக்கங்களைத் தடுக்கிறது.
-
வைட்டமின் ஈ சருமத்தை இறுக்கமாக்குகிறது.
-
தோல் நிறத்தை சீராக்குகிறது.
-
கரும்புள்ளிகளை குறைக்கிறது.
- கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை குறைக்கிறது.
- தோல் நோய்த்தொற்றைத் தடுக்கிறது.
சமையலறையிலிருந்து சில பொருட்களைக் கையோடு எடுத்துக்கொண்டு வீட்டிலேயே வேப்பம்பூ ஃபேஸ் பேக்கை தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. வேப்ப இலையுடன் சிறிது மஞ்சளை சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, பூச வேண்டும்.
2. கரும்புள்ளிகளை அகற்ற, தயிருடன் வேப்பம்பூவைக் கலந்து, தயிர் கரும்புள்ளிகளை அழிக்க செயல்படுகிறது.
3. பளபளப்பான சருமத்தை விரும்பினால், வேம்பு மற்றும் முல்தானி மிட்டி மற்றுநம் சில துளசிஇலைகளைச் சேர்த்து, பேஸ்ட் போள்று பூசிக்கொள்ள வேண்டும்.
4. வேப்பம்பூ பொடி, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் ஏற்படும் முகப்பருவை தடுக்கும்.
5. வெள்ளரிக்காய், அரைத்த வேப்ப இலை மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை பயன்படுத்துவதால் முகள் குளிர்ச்சியாவும் முகப்பருவில் இருந்தும் பாதுகாக்கும்.
6. பொடித்த வேப்பம்பூவை, தயிர் மற்றும் தண்ணீரை சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். இதை செய்வதால் முகம் பளப்பளக்கும் என்பதோடு அழுக்கு இல்லாமல் சுத்தாமாக வைத்திருக்க உதவும்.
7. சந்தனம் மற்றும் வேப்பம் பூ சேர்த்து பேஸ்ட் போன்று செய்து பூசினால், முகத்தில் உள்ள தழும்புகள் நீங்கும்.