அதிரடியாக அரை சதம் விளாசிய கோலி! அவர் மனைவி கொடுத்த ரியாக்ஷன்
ஆசிய கோப்பையில் அரைசதம் விளாசி அதிரடியாக கோலி பார்முக்கு திரும்பியதற்கு அவர் மனைவி அனுஷ்கா சர்மா ரியாக்ட் செய்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 27ஆம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட நிலையில் நட்சத்திர வீரர் கோலி 35 ரன்கள் எடுத்தார்.
நேற்று நடந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் கோலி 59 ரன்களை குவித்தார். இதன்மூலம் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். விராட் கோலி அரை சதம் அடித்த நிலையில் அதற்கு அவர் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ரியாக்ட் செய்துள்ளார்.
அதன்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கோலியின் புகைப்படத்தை வெளியிட்டு virat kohli 50 எனவும் காதல் சின்னமான இதயம் இமோஜியையும் பதிவிட்டுள்ளார்.