35 வயதிலும் ஜொலி ஜொலிக்கும் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா: அழகு ரகசியம் என்ன தெரியுமா?
அனுஷ்கா ஷர்மா இந்தி படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகை, பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அனுஷ்கா ஷர்மாவின் பளபளப்பான முகத்தை கண்டு பலரும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள். அனுஷ்கா ஷர்மா தனது பளபளப்பான சருமத்தின் ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் தனது தோல் பராமரிப்பு குறித்து பகிர்ந்துகொண்டார்.
அதில் பால், தேன், பப்பாளி, வாழைப்பழம் போன்றவற்றை பயன்படுத்தி வீட்டிலேயே ஃபேஸ்பேக் தயாரித்து போட்டுவருகிறேன் என்று கூறியுள்ளார்.
பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் முகத்தை மந்தமான தன்மையைப் போக்கி, பழுப்பு நிறத்தை நீக்கி, சருமத்தின் நிறத்தை சமன் செய்து, பொலிவைத் தருகின்றன.
அனுஷ்கா ஷர்மா டயட் திட்டத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் பழங்கள் நிறைந்துள்ளன. மேலும் நொறுக்கு தீனிகளை தவிர்த்து நட்ஸ்,பழங்கள்,புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்கிறார்.
அனுஷ்கா ஷர்மா கூறிய அவரின் அழகின் ரகசியம் குறித்த ஃபேஸ்பேக் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருள்
- வாழைப்பழம்-1
- பப்பாளி-2 சிறிய துண்டு
- பால்- 2 டீஸ்பூன்
- தேன்-1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் வாழைப்பழத்தை தோலுரித்து சேர்த்து ஸ்பூன் பயன்படுத்தி நன்கு மசித்து கொள்ளவும்.
பின்பு அதில் பப்பாளி பழம் 2 துண்டுகளை சேர்த்து மசித்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அதில் பால் 2 டீஸ்பூன் மற்றும் தேன் 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் ஃபேஸ்பேக்காக போட்டுக்கொள்ளவும்.
இது நன்கு காய்ந்தவுடன் முகத்தை கழுவிக்கொள்ளவேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் சேர்ப்பதன் மூலம் முகம் பளபளப்பாக காணப்படும்.
முகத்தில் உள்ள அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த சருமத்தை அகற்றி, அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கச்செய்யும்.
மேலும் இது இயற்கையான பொலிவை பராமரிக்கவும், மந்தமான தன்மையைப் போக்கி, மென்மையான சருமத்தை வழங்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |