விருப்ப ஓய்வு வாங்கி குடும்பத்துடன் பிரான்ஸுக்கு பறந்த கோலி! மனைவி வெளியிட்ட புகைப்படம்
விராட் கோலி தனது குடும்பத்தாருடன் பிரான்ஸுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்த நிலையில் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் அணியில் இருக்க வேண்டும் என தேர்வாளர்கள் விரும்பிய போதிலும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விராட் கோலி இந்த தொடரில் விளையாட விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Instagram/Anushka Sharma
இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையுடன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றிருக்கிறார் கோலி. இது தொடர்பில் அவர் எந்தவொரு சமூகவலைதள பதிவையும் வெளியிடவில்லை.
ஆனால் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் ’Hello Paris’ என பாரீஸ் ஹொட்டல் அறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.