இனி பிரித்தானியாவிற்கு நுழையும் பயணிகளுக்கு இது கட்டாயம்! போரிஸ் ஜோன்சன் முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்பதை போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் Nottingham மற்றும் Brentwood-ல் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸான ஒமைக்ரான் இரண்டு பேருக்கு பரவியிருப்படை சுகாதார செயலாளர் Sajid Javid உறுதிபடுத்தினார்.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று மாலை உள்ளூர் நேரப்படி 5 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதில் பேசியது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், ஐரோப்பாவில் தடுப்பூசி திட்டம் மிகவும் வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயனாக மில்லியன்கணக்கான தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. ஆனால், கொரோனா வழக்குகள் இதனுடன் ஒப்பீடும் போது, அதிகமாக இருந்தாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
Read my statement at the COVID-19 press conference here: https://t.co/LtW3SXF6GF
— Boris Johnson (@BorisJohnson) November 27, 2021
இந்நிலையில், கடந்த புதன் கிழமை புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த செய்தி கிடைத்தது. அதற்கு Omicron என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் குறித்து, உடனடியாக உலகிற்கு தெரிவித்த, தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. பிரித்தானியாவில் இதுவரை 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படும் போது, அதைப் பற்றி முழு விஷயங்களை நம்மால் ஆரம்பகட்டத்தில் அறியமுடியாது.
இதற்கு விஞ்ஞானிகளுக்கு நேரம் தேவை. அவர்கள் இது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆனால் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவு வருகிறது. இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு மிகவும் விரிவான பிறழ்வு கொண்ட வைரஸாக உள்ளது. எனவே இது காலப்போக்கில் நாம் இப்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசியின் பாதுகாப்பை குறைக்கலாம். எனவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதனால் மேலும் நான்கு நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம். ஆனால் நாம் இப்போது மேலும் சென்று உலகம் முழுவதிலும் இருந்து வருபவர்களுக்கு விகிதாசார சோதனை முறையை செயல்படுத்த வேண்டும்.
இதன் மூலம் நாங்கள் மக்களின் பயணத்தை நிறுத்தபோவதில்லை. அதே சமயம் பிரித்தானியாவிற்கு நுழையும் எவரும் இனி இரண்டாவது நாளின் முடிவில் PCR பரிசோதனையை எடுக்க வேண்டும்.
அதற்கான எதிர்மறையான முடிவு வரும் வரை அவர்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் கடந்த 10 நாட்களாக கொரோனா பரவல் வாய்ப்புள்ள நாடுகளில் இருப்பவர்களைக் கண்டறிய நாங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்.
கடைகளிலும், பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசம் கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் இந்த மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். நாம் வைத்திருக்கும் தடுப்பூசிகள் Omicron-க்கு எதிராக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.
அவை குறைந்தபட்சம் ஓரளவு பாதுகாப்பை வழங்கும் என்று நம்புகிறோம். எனவே மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இன்று முதல் முதல் தடுப்பூசி திட்டத்தை முன்பை விட அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
அடுத்த மூன்று வாரங்களில் இங்கிலாந்தில் மட்டும் 6 மில்லியன் தடுப்பூசிகளை செய்ய நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம்.
இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள், எல்லைகள் மூடப்படுவது, முகக்கவசம் கட்டாயம் போன்றவை எல்லாம் தற்காலிகமானவை மற்றும் முன்னெச்சரிக்கையானவை.
இவற்றை மூன்று வாரங்களில் மதிப்பாய்வு செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.