திடீரென விலை குறைந்த Apple iPad: இதன் சிறப்பம்சங்கள் என்ன?
Apple நிறுவனத்தின் Apple 10th-gen iPad இந்தியாவில் அறிமுகப்படுத்தி ஒரு வருடம் ஆகிய நிலையில், தற்போது அதனின் விலை குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு 10th-gen iPad-ன் Wi-Fi மாடல்கள் ரூ.44,900 விலையிலும், Wi-Fi + Cellular மாடல்கள் ரூ.59,900 என்ற ஆரம்ப விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால் சமீபத்திய விலை குறைப்பிற்கு பிறகு 10th-gen iPad-ன் ஆரம்ப விலை ரூ.39,900-ஆக உள்ளது.
மேலும் Apple Festive Sale-ல் 10th-gen iPad-க்கு தற்போது ரூ.4,000 Instant Cashback வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 10th-gen iPad-ஐ ரூ.35,900க்கு வாங்கலாம்.
இதன் சிறப்பம்சங்கள்
Apple 10th-gen iPad 10.9-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே பெரியதாகவும், நன்கு பிரைட் மற்றும் ஷார்ப்பாக இருப்பதால் வீடியோ, கேம்ஸ்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.
பிரபலமான மொபைல் processors-களில் A14 Bionic chip கொடுக்கப்பட்டது. இந்த Bionic chip Video editing, gaming மற்றும் Multi-tasking பணிகளை எளிதாக செய்யலாம்.
இந்த Apple 10th-gen iPad மாடலில் 12MP Ultra-wide front camera கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10th-gen iPad-ஆனது சிறந்த battery capacity, அதிக Storage option-களை கொண்டுள்ளது.
மேலும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Connectivity option-களில் Wi-Fi 6, USB Type-C port மற்றும் 5G Support-ஐ கொண்டுள்ளது.
இதில் Center stage அம்சம் Facetime calls-களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் முறையாக Entry-level iPad மாடலுக்கும் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |