iPhone பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு: இலவச சரிசெய்தல் சலுகையை வழங்கிய Apple
Apple, iPhone 14 Plus பயனர்களுக்காக, பின்புற கேமரா முன்னோட்ட பிரச்சனையை சரி செய்யும் நோக்கில், புதிய சரிசெய்தல் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 2023 மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான iPhone 14 Plus சாதனங்களை பாதிக்கும் குறிப்பிட்ட பிரச்சனையை இந்த திட்டம் குறி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் iPhone 14 Plus இலவச சரி செய்தலுக்கு தகுதியானதா?
Apple இன் அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கத்துக்குச் சென்று உங்கள் சாதனத்தின் IMEI எண்ணை உள்ளிடவும்.
உங்கள் சாதனம் இலவச சரிசெய்தல் திட்டத்திற்கு தகுதியானதா என்பதை ஆதரவு பக்கம் தெரிவிக்கும்.
நீங்கள் தகுதியுள்ளவராக இருந்தால், உங்களுக்கு பல விருப்பங்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் உங்களுக்கான தேவையை தேர்வு செய்யவும்.
இந்த சரிசெய்தல் திட்டம் iPhone 14 Plus க்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் பிற iPhone 14 மாடல்களுக்கு பொருந்தாது.
அதே சமயம், இந்த பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே சரி செய்தல்களுக்கு பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் செலவுகளை திரும்ப பெற Apple ஐ தொடர்பு கொள்ளலாம்.
சரி செய்தலுக்கு தேவைப்படும் பொருட்கள்
- உங்கள் iPhone 14 Plus சாதனம்
- அதன் பொருத்தமான பாகங்கள்
- செல்லுபடியாகும் அரசாங்க அடையாள அட்டை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |