உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய Apple
மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தை வீழ்த்தி ஆப்பிள் (Apple) உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.
ஆப்பிள் நிறுவனம் மீண்டும் உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
இதுவரை முதல் இடத்திற்கு முன்னேறி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் ஐபோன்களின் விற்பனை அபரிமிதமாக அதிகரித்துள்ளதால் அந்நிறுவனத்தின் பங்கு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதே இதற்குக் காரணம்.
இந்நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதம் அதிகரித்து 215.04 டொலராக உயர்ந்தது. இதன் மூலம் நிறுவனத்திற்கு 3.29 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்பு கிடைத்தது.
அதே நேரத்தில், மைக்ரோசாப்ட் பங்கு மதிப்பு சரிந்ததால், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.24 டிரில்லியன் டொலர்களாக குறைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple, Apple iPhones, Microsoft, Artificial Intelligence, Apple-world's most valuable company