ஒரு வாடிக்கையாளருக்கு 2 iPhone தான் - இந்தியாவில் புதிய வரம்பு விதித்த Apple
Apple Caps iPhone Sales at 2 Units in India: Apple நிறுவனம் இந்தியாவில் iPhone வாங்கும் விதிமுறையில் புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
ஒரு வாடிக்கையாளருக்கு 2 iPhone
இனி, ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் இரண்டு iPhone-களை மட்டுமே வாங்க முடியும்.
இது ஒரே மாடலாகவும் இருக்கலாம் அல்லது இரண்டு வெவ்வேறு மாடல்களாகவும் இருக்கலாம். ஆனால், மூன்றாவது iPhone-ஐ ஒரே ஆர்டரில் சேர்க்க முடியாது.

இந்த கட்டுப்பாடு, அக்டோபர் 23-ஆம் திகதி வெளியிடப்படும் அப்பிளின் முதல் foldable ஸ்மார்ட்போனான iPhone Duo அறிமுகத்திற்கு முன்பாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Apple-இன் ஓன்லைன் ஸ்டோரில், இந்த வரம்பு iPhone Duo, iPhone 18 Pro, iPhone 18 Pro Max மட்டுமல்லாமல், மற்ற iPhone மாடல்களுக்கும் பொருந்துவதாகக் காணப்படுகிறது.
Apple-இன் புதிய விதிமுறைகள், மொத்தமாக வாங்கும் iPhone எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன. அதாவது, ஒரே ஆர்டரில் இரண்டு iPhone-களை மட்டுமே சேர்க்க முடியும். தனித்தனி மாடல்களுக்கு தனி வரம்பு இல்லை. இந்த நடவடிக்கை, resale சந்தையை கட்டுப்படுத்தவும், அதிகளவு (bulk) வாங்குதலைத் தடுக்கவும் Apple எடுத்த முக்கியமான முடிவாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் iPhone-க்கு இருக்கும் அதிகமான தேவை காரணமாக, சிலர் bulk-ஆக வாங்கி, அதிக விலையில் மீண்டும் விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. Apple-ன் இந்த புதிய கொள்கை, வாடிக்கையாளர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |