ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு! இதுவே முதல் முறை
ஆப்பிள் நிறுவனம் ஐபேட் தயாரிப்பை சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி தனது ஐபேட் மொடல்களின் உற்பத்தியை சீனாவிற்கு வெளியே மாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
ஷாங்காய் மற்றும் நாட்டின் பிற நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தான் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதுமே சீனாவை அதிகளவில் சார்ந்து வந்திருக்கிறது.
வாட்ஸ் அப்பில் வருகிறது 2 அசத்தலான அம்சங்கள்! புகைப்படம் கசிந்தது
சில காலமாக, ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கப் பார்க்கிறது.
அடுத்த சாத்தியமான சந்தைக்கு வியட்நாம் மிகவும் பொருத்தமான தேர்வாக உள்ளதால் அதன் உற்பத்தியை அங்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.