பல்லாயிரக்கணக்கான அப்பிளிக்கேஷன்களை நீக்கியது ஆப்பிள்: அதிர்ச்சியில் பயனர்கள்
ஆப்பிள் நிறுவனமானது தனது iOS சாதனங்களுக்கான 39,000 ஹேம் அப்பிளிக்கேஷன்களை ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.
இவை அனைத்தும் சீனாவிற்கான ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஒரே நாளில் மிக அதிகளவான அப்ளிக்கேஷன்கள் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட சம்பவமாக இது திகழ்கின்றது.
வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையிலேயே குறித்த ஹேம் அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
டந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது ஹேம் அப்பிளிக்கேஷன்கள் மாத்திரமே 39,000 வரை நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஒட்டுமொத்தமாக 46,000 இற்கும் மேற்பட்ட அப்பிளிக்கேஷன்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.