இந்தியாவில் இனி இந்த ஐபோன் மாடல் இல்லை! விற்பனையை நிறுத்தியது ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ்.ஆர். மாடல் விற்பனையை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டது.
ஐபோன் எக்ஸ் சீரிசுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்எக்ஸ்.ஆர். மாடல் அந்நிறுவன வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதேபோன்று ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
எனினும், இந்த மாடல் ப்ளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மூன்றாம் தரப்பு ஆன்லைன் வலைதளங்களில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.