Siri-க்கு Gemini AI வழங்க திட்டம்: Google நிறுவனத்துடன் Apple பேச்சுவார்த்தை
Apple நிறுவனம் Siri-ஐ மேம்படுத்த புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை தேடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தற்போது கூகுளின் Gemini AI திறனை Siri-யில் பயன்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியை மேம்படுத்தும் திட்டம் WWDC 2024-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப சிக்கல்களால் ஒரு வருடம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கூகுளுக்கு முன்பாக, Anthropic-ன் Claude மற்றும் OpenAI-ன் ChatGPTயை Siri-க்கு பயன்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்ந்துள்ளது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் 2 Siri பதிப்புகளை உருவாகிவருகிறது. ஒன்று, அதன் சொந்த AI மொடலான Lindwood-ல் இயங்கும், மற்றொன்றுGlenwood எனும் AI மொடலால் இயங்கும்.
இந்த முயற்சிகள் சிரியை மேலும் புத்திசாலியாகவும், பயனுள்ளதாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple Siri AI, Gemini AI model, Google Apple partnership, Siri vs ChatGPT, Siri Gemini integration, Apple Google AI deal