ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியப்படும் வகையில் பரிசு வழங்கிய ரசிகர்! வைரலாகும் வீடியோ
இந்தியாவிலுள்ள மும்பையில் முதல் முதலாக ஆப்பிள் நிறுவனத்தின் கடை திறப்பு விழாவில், ஆப்பிள் தலைமை நிர்வாகிக்கு ஆச்சரியமூட்டும் பரிசொன்றை ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் ரசிகர் வழங்கியுள்ளார்.
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்
மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் இந்தியாவின் முதல் ஆப்பிளின் சில்லரை விற்பனை கடைக்கு பிரமாண்டமாக திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்(tim cook) கடையை திறந்து வைத்துள்ளார்.
கடந்த திங்களன்று ட்விட்டரில் மும்பை ஸ்டோரில் இருந்து தனது குழுவுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில் "ஹலோ, மும்பை! நாளை புதிய ஆப்பிள் பிகேசி (பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்) எங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலையில் கடைக்கு வெளியே மக்கள் கூட்டம் அலைமோதியது. கடைக்குள் சென்று பார்வையிட மக்கள் பொறுமையாக காத்திருந்தார்கள்.
ஆச்சரியமூட்டும் பரிசு
துவக்க விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கருப்பு சட்டை மற்றும் மஞ்சள் தொப்பி அணிந்த ஒருவர் கடைக்குள் நுழைந்தார். தன்னை ஆப்பிள் தயாரிப்புகளின் தீவிர ரசிகன் என்று அழைத்துக் கொண்ட அவர், ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் கணினியை நிறுவியதிலிருந்து அந்த பிராண்டுடன் தான் ஒட்டிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
பின்னர் தான் கொண்டு வந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் பழமையான இயந்திரமான மேகிண்டோஷ்(Macintosh) கிளாசிக் இயந்திரத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத டிம்குக் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார், பின்னர் ஆர்வாக அந்த பழைய இயந்திரத்தை பார்த்துள்ளார், மேலும் பரிசு வழங்கிய நபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
#WATCH | Apple CEO Tim Cook surprised at seeing a customer bring his old Macintosh Classic machine at the opening of India's first Apple store at Mumbai's BKC pic.twitter.com/MOY1PDk5Ug
— ANI (@ANI) April 18, 2023
முன்னாள் Apple CEO ஸ்டீவ் ஜாப்ஸ், 1984 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவில் நடந்த Apple இன் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் முதல் Macintoshயை அறிமுகப்படுத்தினார், 9 அங்குல கருப்பு மற்றும் வெள்ளை காட்சி மற்றும் மலிவு விலையில் புதிய கணினியை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.