ஆப்பிளின் பண்டிகை கால சலுகைகள்: iPhone 17, MacBooks, iPad-களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி
பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
iPhone 17, AirPods Pro 3, Watch Series 11, iPads மற்றும் MacBooks ஆகிய சாதனங்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் ஆப்பிளின் Online மற்றும் Offline ஸ்டோரிகளில் கிடைக்கும்.
புதிய iPhone 17 தொடர் iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max என நான்கு மொடல்களில் வெளியாகியுள்ளது. இவை 256GB சேமிப்பு திறனுடன் தொடங்குகின்றன.
iPhone 17 Pro Max மொடலில் 6.9 இன்ச் LTPO OLED திரை, 48MP மூன்று Camera மற்றும் periscope zoom வசதி உள்ளது. அனைத்து மொடல்களிலும் A19 Pro சிப் மற்றும் AI அம்சங்கள் உள்ளன.
iPhone 16 தொடர் மொடல்களில் A17 மற்றும் A18 Pro சிப்கள், 48MP கமெராக்கள், USB-C போர்ட் மற்றும் ம்புதிய Camera Control button வழங்கப்பட்டுள்ளது. iPhone 16 Pro Max மொடலில் 5x optical zoom வசதி உள்ளது.
வாடிக்கையாளர்கள் iPhone 17 தொடர்களுக்கு ரூ.5000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.
iPhone 16 மொடல்களுக்கு ரூ.4000வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து முக்கிய வங்கிகளிலும் 12 மாத No-Cost EMI வசதி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple festival sale, iPhone 17 series offer, iPhone 16 series offer, AirPods Pro 3, Watch Series 11, iPads, MacBooks