2026-ல் ஆப்பிளின் முதல் Foldable iPhone அறிமுகம் - விலை 2000 டொலருக்கு வாய்ப்பு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது முதல் Foldable iPhone-ஐ 2026-இல் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக பிரபல ஆய்வாளர் Ming-Chi Kuo தெரிவித்துள்ளார்.
ஆப்பிள், 2026 இலையுதிர் காலத்தில் (செப்-அக்டோபர்) தனது Foldable iPhone-ஐ அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை சுமார் 2000 அமெரிக்க டொலர் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Foldable iPhone-ன் தடிமன் 9 mm அளவில் இருக்கும், மடக்கப்பட்டபின் சுமார் 9.2 mm இருக்குமென கூறப்படுகிறது.

ஆப்பிள், 2025-இல் iPhone Air-ஐ வெளியிட்டிருந்தது. அதன் இரண்டாவது பதிப்பு iPhone Air 2, உற்பத்தி சவால்கள் காரணமாக 2027-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், Foldable iPhone-க்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
சவால்கள் மற்றும் வாய்ப்புகள்
உற்பத்தி அளவு குறைவாக இருப்பதால், ஆரம்பத்தில் சிறிய அளவில் மட்டுமே வெளியீடு செய்யப்படும்.
இது, 2017-ல் வெளியான iPhone X போல, குறைந்த அளவில் அறிமுகமாகி பின்னர் பெருமளவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள், AI மற்றும் Edge Computing-க்கு பெரிய திரை அவசியம் என கருதி, Foldable iPhone-ஐ எதிர்கால AI அனுபவங்களுக்கான முக்கிய சாதனமாக பார்க்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |