ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு புதிய அழுத்தத்தை உருவாக்கியுள்ள பிரித்தானிய அரசு
பிரித்தானிய அரசு, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களை, ஓன்லைனில் நிர்வாண படங்களை பகிர்வதையும் பார்ப்பதையும் தடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த புதிய கொள்கை, குழந்தைகள் பாதுகாப்பை முன்னிறுத்தினாலும், தனியுரிமை சிக்கல்கள் குறித்து விவாதம் எழுந்துள்ளது.
இதன்மூலம் பிரித்தானிய அரசு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகிள் மீது புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயது சரிபார்ப்பு (Age Verification) இல்லாமல், iOS மற்றும் Android சாதனங்களில் நிர்வாண படங்களை எடுக்கவும், பகிரவும், பார்க்கவும் தடை செய்ய வேண்டும் என்று அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்த திட்டத்தின் படி, நிர்வாணம் கண்டறியும் அல்காரிதம் (nudity-detection algorithms) சாதனங்களின் இயங்குதளத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
பயனர் பயோமெட்ரிக் சோதனை அல்லது அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மூலம் வயதை நிரூபித்தால் மட்டுமே, நிர்வாண படங்களை அணுக அனுமதி வழங்கப்படும்.
அரசு இதை சட்டமாக்கவில்லை என்றாலும், டெக் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மெட்டா போன்ற நிறுவனங்கள், இத்தகைய விதிகளை வலியுறுத்தி, கூகுள் மற்றும் ஆப்பிள் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.
ஆனால், நிபுணர்கள் இந்த கொள்கை தனியுரிமை சிக்கல்களை உருவாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு நோக்கத்துடன் வந்தாலும், தகவல் பாதுகாப்பு மற்றும் பயனர் சுதந்திரம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தற்போது உலகளாவிய தொழில்நுட்ப துறையில் சூடான விவாதமாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple Google nude image ban, Age verification online safety, UK government tech regulation, Apple Google child protection policy, Nude content detection algorithms, iOS Android age verification rules, Tech companies privacy concerns, Online safety bill UK 2026, Apple Google restrict explicit images, Digital safety and age checks