ஐபோன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஆப்பிள்
உலகெங்கிலும் இன்று ஸ்மார்ட் கைப்பேசி பாவனையானது வெகுவாக அதிகரித்துள்ளது.
இப்படியிருக்கையில் சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் கைப்பேசிகளே அதிகம் விற்பனையாகின்றன.
எனினும் ஐபோன்களின் விலை அதிகமாக இருக்கின்ற போதிலும் தற்போது அவற்றினை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இப்படியான நிலையில் தற்போது ஐபோன்கள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அதாவது தற்போது சுமார் 1.65 பில்லியன் ஐபோன்கள் உலகெங்கிலும் ஆக்டிவேட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் iPhone X, iPhone XR, iPhone 11, இரண்டாம் தலைமுறை iPhone SE ஆகிய கைப்பேசிகளே அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.