Apple அறிமுகம் செய்யும் ஒற்றை Camera iPhone- வெளியான தகவல்
Apple நிறுவனம் அதன் பட்ஜெட் பிரிவில் iPhone சாதனத்தை iPhone SE 4 என்ற பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த புதிய iPhone SE சாதனம் அசத்தலான அம்சங்களை பேக் செய்து வெளிவர இருப்பதாக லீக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒற்றை Camera iPhone குறித்து விரிவாக பார்க்கலாம்.
iPhone SE 4
வெளியாகவிருக்கும் புதிய iPhone SE 4 சாதனம் Dynamic Island அம்சத்துடன் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இது Apple-ன் அடுத்த தலைமுறை சாதனமான iPhone 16 வடிவமைப்பை தழுவி வெளிவரும் என்றும் சில தகவல்களை வெளியாகியுள்ளன.
iPhone வரிசையில் மிகவும் குறைந்த விலை போனாக Apple iPhone SE மாடல் இருக்கிறது.
இந்த சமீபத்திய வெளியான தகவல் @upintheozone மற்றும் @MajinBuOfficial மூலம் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த Apple iPhone SE, iPhone 16 camera pill வடிவமைப்பை பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இதன் அளவு ஏறக்குறை iPhone-ன் முந்தைய மாடலான iPhone XR அளவில் இருக்குமென்று கூறப்படுகிறது.
மேலும், iPhone 16-ல் இருக்கும் இரண்டு Camera போல் இல்லாமல், ஒற்றை Camera அமைப்பை கொண்டிருக்கும் என்று தகவலில் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய iPhone SE 4 சாதனம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த 2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இது iPhone 16 தொடருடன் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
அல்லது iPhone SE 4 சாதனம் மட்டும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாக வாய்ப்புளள்து என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |