Amazon-ல் வெறும் ரூ.38,999-க்கு iPhone12.! வாங்குவது எப்படி?

Apple Amazon iPhone iPhone 12 Smartphone Offer Exchange iPhone SE iPhone 11
By Ragavan Feb 24, 2022 12:47 AM GMT
Report

Apple நிறுவனம் 2022-ஆம் ஆண்டிற்கான அதன் லேட்டஸ்ட் மாடல்களாக iPhone 13 சீரிஸை அறிமுகம் செய்து இருந்தாலும் கூட முந்தைய மாடல்களில் ஒன்றான iPhone 12 மீதான மவுசு கொஞ்சமும் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் iPhone 12 மாடலுக்கும், iPhone 13 மாடலுக்கும் இடையே ஒரு சில சிறிய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன.

இதற்கிடையில் தான் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Amazon India, iPhone 12 மாடல் மீது ஒரு நம்பமுடியாத சலுகையை அறிவித்து உள்ளது.

ஒருவேளை உங்களுக்கு ஒரு தரமான ஐபோன் மாடலை வாங்க வேண்டும் அதே சமயம் அது உங்கள் பட்ஜெட்டை மீறிவிடக்கூடாது என்றால் அமேசானின் இந்த iPhone 12 ஆஃபரை நீங்கள் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கம் போல, Apple நிறுவனம் iPhone 12 மீதான எந்தவிதமான பெரிய தள்ளுபடியையும் அல்லது விலைக் குறைப்பையும் வழங்கவில்லை. ஆகையால் நீங்கள் மூன்றாம் தரப்பு சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தே சலுகைகளை தேட வேண்டும். அப்படியான ஒரு சலுகையை தான் Amazon வழங்குகிறது. இந்த இடத்தில் உங்களிடம் பழைய iPhone XR மாடல் இருந்தால் நல்லது என்பதை நினைவில் கொள்ளவும்.

iPhone 12 மாடலை ரூ.38,999-க்கு வாங்குவது எப்படி?

அமேசான் இந்தியாவில் உள்ள அனைத்து ரீடெய்லர்களுமே iPhone 12 மீதான தள்ளுபடிகளை வழங்குகின்றன. இதன் கீழ் பிளாக் கலர் iPhone 12 மாடலின் 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டை நீங்கள் ரூ.51,999-க்கு வாங்கலாம்.

அட்டகாசமான ஐபோன் அனுபவத்தைத் தேடுபவர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத டீலாக இருப்பினும், அமேசான் தளமானது குறிப்பிட்ட ஐபோன் மாடலின் மீது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது.

இது ஐபோன் 12 மாடலின் இறுதி விலையில் இருந்து கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்ய உங்களுக்கு உதவும். அமேசான் தளத்தின் கூற்றுப்படி, iPhone 12 மீது ரூ.14,900 என்கிற எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். இதன் மூலம் iPhone 12 மாடலின் விலையானது iPhone 11-ஐப் போலவே மலிவானதாக மாறும்.

இருப்பினும், இந்த விலையை அடைவது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம். ஏனெனில் குறிப்பிட்ட எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை பெறக்கூடிய ஒரு காம்போ - iPhone XR தான். அதாவது எக்ஸ்சேன்ஜ் செய்ய உங்களிடம் ஐபோன் எக்ஸ்ஆர் இருந்தால், அது நன்றாகப் வேலை செய்தால் உங்களுக்கு ரூ.13,000 என்கிற சலுகை கிடைக்கும்.

இதன் மூலம் ஐபோன் 12 மாடலை ரூ.51,999 என்கிற விலைக்கு மாறாக ரூ.38,999 க்கு வாங்க முடியும். இந்த சலுகை விலை 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

ஒருவேளை நீங்கள் iPhone 11 அல்லது iPhone SE போன்ற மாடல்களை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அவைகளுக்கு மிகவும் குறைவான எக்ஸ்சேன்ஜ் மதிப்பே அணுக கிடைக்கிறது.

குறிப்பாக iPhone SE மாடல் ஆனது ரூ.5000 என்கிற மிகவும் மோசமான எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை வழங்க, மறுகையில் உள்ள iPhone 11 ஆனது ரூ.11,400 என்கிற எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை மட்டுமே வழங்குகிறது.

இந்த இரண்டுமே உங்கள் பழைய ஐபோனுக்கான சிறந்த எக்ஸ்சேன்ஜ் மதிப்புகள் அல்ல என்பதால் எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்புவதும், செய்யமால் இருப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம்.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US