Apple iPhone 13-க்காக காத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியான அப்டேட்
ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய iPhone 13 சீரிஸ் ஐபோன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் ஐபோன் 13 அறிமுகம் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காணும் 4 ஐபோன் மாடல்கள் பற்றிய விவரங்கள் கடந்த சில மாதங்களில் பல முறை லீக் ஆகியுள்ளன. ஆனால் தற்போது ஐபோன் 13 சீரிஸ் வெளியீட்டு தேதியை பற்றிய சில தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் வெளியாகி உள்ள ஒரு புதிய அறிக்கையின் படி, ஆப்பிள் 2021 ஐபோன் சீரிஸ் வரும் செப்டம்பர் 14-ஆம் திகதி அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17 முதல் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களின் ப்ரீ ஆர்டர்களை எடுக்க துவங்கும் என்றும் செப்டம்பர் 24 முதல் புதிய ஆப்பிள் ஐபோன் சீரிஸ்களை மக்கள் தங்கள் கைகளில் பெற வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட தேதிகள் புதிய ஐபோன் சீரிஸை அறிமுகப்படுத்தும் போது ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக பின்பற்றும் செவ்வாய் (செப்டம்பர் 14) -வெள்ளி(செப்டம்பர் 17) -வெள்ளி (செப்டம்பர் 24 ) வெளியீட்டு ஷெட்யூலுடன் சரியாக பொருந்துகின்றன.
ஆப்பிள் நிறுவனம் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 130 முதல் 150 மில்லியன் ஐபோன் 13 யூனிட்களைக் தயாரிக்க உள்ளதாகவும், ஆரம்பகாட்டமாக குறைந்தது 90-100 மில்லியன் ஆர்டர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.