Apple iPhone 13 போன்களுக்கு தள்ளுபடி., Amazon, Flipkart-ல் குறைந்த விலையில்
ஆப்பிள் ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஐபோன் 15 இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது. அதற்கு முன்பே, ஐபோன் 13-ல் நீங்கள் பெரிய தள்ளுபடியைப் பெறலாம்.
குறிப்பாக இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 13 விலை குறைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு விதிமுறைகளும் நிபந்தனைகளும் இல்லாமல் பயனர்கள் பெரும் தள்ளுபடியைப் பெறலாம்.
வரவிருக்கும் புதிய ஐபோன் 15 சீரிஸ் செப்டம்பர் 12-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. ஐபோன் 13 பழைய மாடலாக இருப்பதால், இ-காமர்ஸ் தளத்தில் விலை மிகவும் குறைவாக கிடைக்கலாம்.
லேட்டஸ்ட் 2023 மொடல் ஐபோன் 15 தொடர்கள் இன்னும் 10 நாட்களில் வரும் நிலையில், ஐபோன் 13ஐ வாங்க வேண்டுமா? என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், விலை குறைந்தால் ஐபோன் வாங்கலாம் என நினைப்பவர்களுக்கு இந்து ஒரு நல்ல வாய்ப்பு.
ஏனெனில், தற்போது Amazon மற்றும் Flipkart-ல் iPhone 13 ரூ. 58,999 ஆரம்ப விலையில் கிடைக்கும். இந்த 5G ஐபோன் வங்கி சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடி சலுகைகளுடன் மலிவாகப் பெறலாம். ஆனால், இப்போது, பயனர்கள் இந்த குறைந்த விலையில் ஐபோன் 13 ஐ வங்கி சலுகை இல்லாமல் குறைந்த விலையில் வாங்கலாம்.
கூடுதலாக, இன்னும் கூடுதலான தள்ளுபடிகளைப் பெற, HDFC வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் Flipkart வழியாக iPhone 13 ஐ ரூ. 56,999 வாங்கலாம். அமேசானில் வங்கி சலுகை இல்லை. ஆனால், இரண்டு தளங்களும் எக்ஸ்சேஞ் சலுகைகளை வழங்குகின்றன. உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் இந்த ஐபோனை இன்னும் குறைந்த விலையில் பெறலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ் மதிப்பு உங்கள் பழைய தொலைபேசியின் வேலை நிலையைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஐபோன் 13 வாங்க வேண்டுமா? ஐபோன் 15க்காக காத்திருக்கலாமா?
இதுவரை கசிந்த விவரங்களின்படி.. கேமரா, சிப்செட், டிசைன் போன்றவற்றில் ஐபோன் 15 குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களுடன் வரும். ஆனால், மேம்படுத்தல்கள் ஐபோன் 15 அதிக விலையில் வரக்கூடும்.
ஆரம்ப விலையே சுமார் ரூ. 80,000 அல்லது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நீங்கள் சமீபத்திய அம்சங்களை விரும்பினால், நீங்கள் iPhone 15ஐ வாங்கலாம். இல்லையெனில், பட்ஜெட்டுக்கு ஏற்ற ஆப்ஷனை விரும்பும் பயனர்கள் ஐபோன் 13ஐ வாங்கலாம்.
ஐபோன் 13 இரண்டு ஆண்டுகள் பழைய மாடலாக இருந்தாலும், அடுத்து வந்த (2022) ஐபோன் 14 மாடலுக்கு ஒத்ததாக உள்ளது. ஆனால் ஐபோன் 14 தற்போது இந்திய சந்தையில் ரூ. 65,000-கும் அதிகமாக விலையில் உள்ளது.
எனவே ஐபோன் 13ஐ வாங்கினாலும் நீங்கள் ஒரே மாதிரியான கேமரா, டிஸ்ப்ளே, பேட்டரி, சிப்செட் செயல்திறனைப் பெறலாம். அதுமட்டுமின்றி, ஆப்பிள் போன்கள் ஐபோன் 11 மாடல்களில் இருந்து வடிவமைப்பு மாறாமல் உள்ளது என கூறலாம்.
மொத்தத்தில், பட்ஜெட் உணர்வுள்ள பயனர்கள் ஐபோன் 13ஐ வாங்கலாம். சுமார் ரூ. 80 ஆயிரத்திற்கு மேல் செலவழிக்கக்கூடியவர்கள் iPhone 15க்காக காத்திருக்கலாம்.
இருப்பினும், ஐபோன் 15 அறிமுகத்திற்குப் பிறகு பழைய ஐபோன்களின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஐபோன் 14ன் விலையையும் ஆப்பிள் குறைத்து அறிவிக்க வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
iPhone 13 price drops, iPhone 13 in Amazon, iPhone 13 in Flipkart, iPhone 15 launch, iPhone 15 launch date september 12, Apple iphones