Apple-ன் iPhone 13 பிரச்சினை: திடீரென நிறம் மாறும் டிஸ்பிளே! பயனர்கள் குற்றச்சாட்டு
Apple நிறுவனத்தின் சமீபத்திய iPhone 13 பயன்படுத்துவோர் தங்களின் போன் ஸ்கிரீன் திடீரென பிங்க் நிறத்திற்கு மாறிவிடுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
Apple iPhone 13 பயனர்கள் தங்கள் ஐபோனின் ஸ்கிரீன் திடீரென பிங்க் அல்லது பர்பில் நிறத்திற்கு மாறிவிடுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சூழல்களில் மேற்கொள்ளப்படும் ஃபேக்டரி ரிசெட் மற்றும் அப்டேட் உள்ளிட்டவைகளும் பலன் அளிக்கவில்லை என பயனர்கள் புலம்புகின்றனர்.
சீனாவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான யூனிட்களில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய குற்றச்சாட்டுகளை பலர் வெய்போ அக்கவுண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
பிங்க் ஸ்கிரீன் பிரச்சினையுடன் லேக் (lag), ஃபிரீஸ் (Freeze), ஆட்டோமேடிக் ரி-ஸ்டார்ட் (automatic restart) மற்றும் இதர குறைபாடுகளும் ஏற்படுகிறது.
இது நிரந்தர பிரச்சினையாக தோன்றவில்லை. அடிக்கடி ஏற்படும் பிங்க் ஸ்கிரீன் குறைபாடு, பின் அதுவே தானாக சரியாகி விடுவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்கிரீன் பிங்க் நிறத்திற்கு மாறினாலும் ஸ்டேடஸ் பார் ஐகான்கள் மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. இது ஹார்டுவேர் பிரச்சினை இல்லை.
அப்டேட் செய்தாலே இந்த பிரச்சினை சரியாகிவிடும் என Apple அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்ததாக வெய்போ பயனர் பதிவிட்டுள்ளார்.
வாடிக்கையாளர் சேவை மையம் பயனர்களிடம் அனைத்து செயலிகளையும் அப்டேட் செய்ய பரிந்துரைப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
இவை எதுவும் பலன் அளிக்காத பட்சத்தில் ஆப்பிள் புது ஐபோன்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
தற்போதைய தகவல்களின் படி iPhone 13, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max மொடல்களில் பிங்க் ஸ்கிரீன் பிரச்சினை ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.