Apple-ன் iPhone 14 Pro குறித்து வெளியான அட்டகாசமான தகவல்!
அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் Apple-ன் iPhone 14 Pro மொபைல் போனில் மாத்திரை வடிவ கமெரா கட்அவுட் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Apple தனது புதிய 'iPhone 14 Pro' மொடல்களை 2023-ல் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், iPhone 14 Pro குறித்த அட்டகாசமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மொடலில் டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் மாத்திரை வடிவ கேமரா கட்அவுட் (pill-shaped camera cutout) இடம்பெறும் என்றும் நாட்ச் (Notch) அகற்றப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லீக்கர் @dylandkt-ஆல் பகிரப்பட்ட ட்வீட்களின்படி, இந்த மாற்றத்திற்கு இடமளிக்கும் வகையில், ஃபேஸ் ஐடி வன்பொருள் டிஸ்பிலேவின் கீழ் நகர்த்தப்படும் என்று MacRumors தெரிவித்துள்ளது.
கமெராவிற்கான சிறிய கட்அவுட்டுக்கு ஆதரவாக நாட்ச்சை நீக்கிய முதல் flagship போனாக iPhone 14 Pro இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில், Apple ஆய்வாளர் மிங்-சி குவோ, 2022 iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max கமெராவிற்கான Punch-Hole கட்அவுட்டுக்கு மாற்றப்படும் என்று கூறினார்.
இதற்கிடையில் iPhone 14 மோதல்களில் சிம் கார்டு ஸ்லாட்டை ஆப்பிள் அகற்றும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக இரட்டை சிம் செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில் இரண்டு eSIM கார்டுகளுக்கு ஆதரவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், iPhone 14 சீரிஸ் போன்கள் 2 TB சேமிப்பகத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.