8GB RAM உடன் வருகிறது ஆப்பிள் ஐபோன் 15
8GB RAM வசதியுடன் ஆப்பிள் ஐ போன்- 15 மாடல் புதியதாக வெளியாக ஆப்பிள் தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ போன்-15 ப்ரோ
ஆப்பிள் தொழில் நுட்ப நிறுவனம் ஐ போன் -15 ப்ரோ மாடலில் 8GB RAM வசதியுடன் வெளியிடவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் ஐ போன்- 15 மாடல்களின் செயல் திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
வரவிருக்கும் ஐ போன்- 15 ப்ரோ மாடல்களில் 8GB RAM பொருத்துவதன் மூலம் முன்பை விட அதிவேகமாக போன் செயலிகளை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
A17 Bionic CPU
ஐ போன்- 15 ஒப்பிடுகையில் ஐ போன்- 14 மாடல்களில் 6 GB RAM இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இனி வரவிருக்கும் ஐ போன்- 14 மற்றும் ஐ போன் -15 மாடல்களில் செயல் திறன் அதிகமாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
A17 Bionic CPU மூலம் ஐ போன்-15 ப்ரோ மாடல்களுக்கான ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்லிய வடிவத்தில் ஐபோன் 15
ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம் ஐ போன் -15 தொடரை இந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. கடந்த மாதம், ஐ போன்-14 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும்போது ஐபோன்- 15 ப்ரோ மாடல்கள் மிக மெல்லிய, வளைந்த பெசல்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.