ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 16 சீரிஸ்: விலை உட்பட மொத்த தகவல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 உள்ளிட்டவையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐபோன் 16 மொடல்கள்
கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வில், ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர் பாட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் 16 சீரிஸின் ஐபோன் ப்ரோ 16 அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பில் மொத்த தகவலும் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவின் குபர்ட்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இந்த இட்ஸ் க்ளோ டைம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியிடப்பட்டது.
ஆப்பிளின் அடிப்படை மொடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஐபோன் 15 ஃபோன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மொடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ டெசர்ட் டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. டார்க் ப்ளாக், டார்க் சில்வர் உள்ளிட்ட 4 வண்ணங்களில் கிடைக்கும் ஐபோன் ப்ரோ, அதிகபட்ச பேட்டரி லைஃபை கொண்டுள்ளது.
கடந்த 15 மொடல்களை போல இந்த போனிலும், சி டைப் சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் ஐபோன் 16 மொடலில் உள்ளதை போன்று ஏ18 பிராசசர் உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் இருந்ததை போன்று ப்ளாஷுடன், 3 கமெராக்கள் இடம்பெற்றுள்ளன.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவில் 48 எம்பி பியூஷன் மெயின் கமெரா இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் 24 மில்லி மீற்றர் போக்கல் லென்த், 48 மில்லி மீற்றர் இரண்டு மடங்கு டெலி போட்டோ, ஆன்ட்டி ரெஃலெக்டிவ் லென்ஸ் கோட்டிங், இரண்டாம் தலைமுறை சென்சார் ஷிப்ட் ஐஓஎஸ். 100 சதவீத பிக்சல் போக்கஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் 48 எம்பி அல்ட்ரா வைட் கமெரா மூலம் ஹைபிரிட் ஃபோக்கஸ், பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். ஐபோன் 16 ப்ரோவில் 5x டெலிஃபோட்டோ கமெராவை கொண்டுள்ளது.
துல்லியமாக வீடியோ எடுக்க
அத்துடன் புதிய கமெரா கண்ட்ரோல் பட்டன் இடம்பெற்றுள்ளதால் ஆட்டோ ஜூம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். மேலும் இந்த போன் மூலம் 4கே 120 பிரேம் பெர் செகண்ட் வீடியோக்களையும் எடுக்க முடியும்.
யூடியூபர்கள் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸர்களுக்கு இந்த போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மட்டுமின்றி ஒடியோ மிக்ஸ் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் நீருக்கடியிலும் ஐபோன் 16 ப்ரோ மூலம் துல்லியமாக வீடியோ எடுக்க முடியும்.
ஐபோன் 16 ப்ரோவின் விலை 128 ஜிபி வேரியண்ட் 999 அமெரிக்க டொலர் ( இந்திய மதிப்பில் ரூ 83,870 ) இருந்து தொடங்குகிறது, இது அமெரிக்கா விலை நிலவரம் மட்டுமே.. இந்தியாவில், ஐபோன் 16 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.1,19,900லிருந்து கிடைக்கும்.
மேலும், ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஆனது அமெரிக்க ஆங்கில பதிப்பில் அடுத்த மாதமும், அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து , தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா ஆங்கில பதிப்புகள் டிசம்பர் மாதமும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |