இன்னும் 10 ஆண்டுகளில் Apple IPhone கிடைக்காது! அதிர்ச்சி தகவல்
Apple பயனர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் IPhone பயன்படுத்துவதை நிறுத்தலாம் என்று பிரபல ஆப்பிள் ஆய்வாளர் Ming-Chi Kuo தெரிவித்துள்ளார்.
9to5mac-ல் வெளியான ஒரு அறிக்கையின்படி, Apple ஆய்வாளர் Ming-Chi Kuo IPhone இன்னும் 10 ஆண்டுகள் வரை மட்டுமே கிடைக்கும் என்று கணித்துள்ளார்.
அதன் பிறகு ஆப்பிள் நிறுவனம் ஐபோனுக்கு பதிலாக ஆக்மென்டட் ரியாலிட்டியை (AR) முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளது என அவர் கூறுகிறார்.
"ஆப்பிளின் குறிக்கோள், பத்து ஆண்டுகளில் ஐபோனுக்கு மாற்றாக AR-ஐ கொண்டுவருவதாகவும், அடுத்த தசாப்தத்தில் AR ஹெட்செட்களுக்கான தேவை குறைந்தது ஒரு பில்லியனைத் தாண்டும். ஆப்பிளின் ஒரே ABF சப்ளையர் Unimicron நிறுவனம் முன்னணி பயனாளியாக இருக்கும்,” என்று குவோ கூறினார்.
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 2022-ஆம் ஆண்டில் புதிய AR ஹெட்செட்டை அறிமுகப்படுத்தும் என்றும், அந்த நிறுவனத்தின் எதிர்காலம் அதனுடன் நெருக்கமாக இணைக்கப்படும் என்றும் குவோ குறிப்பிட்டுள்ளார்.
Image credit: Future
“தற்போது, ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் ஐபோன் பயனர்கள் உள்ளனர். பத்து ஆண்டுகளில் ஐபோனை AR உடன் மாற்றுவது ஆப்பிளின் குறிக்கோள் என்றால், பத்து ஆண்டுகளில் ஆப்பிள் குறைந்தது ஒரு பில்லியன் AR சாதனங்களை விற்கும் என்று அர்த்தம்” என்கிறார் குவோ.
Apple நிறுவனம் சமீபத்தில் சீனாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறியது, அங்கு ஐபோன் 13சீரிஸ் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் AR ஹெட்செட் ஐபோனில் வேலை செய்யுமா அல்லது வேறு ஏதேனும் கேஜெட்டுடன் செயல்படுமா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், இந்தத் தயாரிப்பு ஒரே ஒரு பயன்பாட்டைக் காட்டிலும் 'பரந்த அளவிலான' பயன்பாடுகளுடன் வேலை செய்யும் என்பது தெளிவாகத் தெரிகிறது.