சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆப்பு!
ஐபோன்களுக்கு சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரம்.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த பிரேசில் நீதிமன்றம்.
ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நீதித்துறை மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது.
அதன்படி 20 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அண்மைகாலமாக தமது ஐபோன் மொபைல்களுடன் சார்ஜர் அடாப்டர் வழங்காமலே விற்பனை செய்து வருகிறது.
இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் சார்ஜர் அடாப்டரை தனியாக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இச்சூழலில், அண்மையில் பிரேசிலில் சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்திருந்தது.
bolnews
இதனிடையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மொடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 கோடி டொலர் அபராதம் விதித்துள்ளது பிரேசிலுள்ள சாவ் பாலோ சிவில் நீதிமன்றம்.
அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரேசிலில் ஐபோன்-12 மற்றும் ஐபோன்-13 வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சார்ஜர் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபோன்களில் சார்ஜர் வைக்காததற்காக இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.