ஐபோன் 14 மொபைல் வெளியீடு தொடர்பில் புதிய அப்டேட்!
ஆப்பிளின் புதிய ஐபோன் 14-ன் வெளியீட்டு திகதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் கேஜெட்களில் ஒன்றாகும். இந்த பிரபலமான மொபைல் பிராண்டு வெளியிடப்படும் அடுத்த போன் ஐபோன் 14 சீரிஸ் (iPhone 14) ஆகும். சீனாவில் ஊரடங்கு காரணமாக, ஆப்பிள் ஐபோன் 14 வெளியீடு சற்று தாமதமாகலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ மற்றும் டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டன்ட்ஸ் (டி.எஸ்.சி.சி) மற்றும் ஆப்பிள் இன்சைடர் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ் யங் ஆகியோரின் தகவல்களின்படி, iPhone 14 Max தயாரிப்பில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ஐபோன் 14 சீரீஸ் நான்கு சாதனங்களைக் கொண்டிருக்கும், ஆனால் அதில் எடிஷன் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பொருள் அனைத்து சாதனங்களும் 6 அங்குலங்களுக்கு மேல் டிஸ்பிளே கொண்டிருக்கும்.
iPhone 14 தொடரில் iPhone 14 (6.1 inch), iPhone 14 Pro (6.1 inch), iPhone 14 Max (6.7 inch) மற்றும் iPhone 14 Pro Max (6.7 inch) ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.
மேலும், ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் A16 சிப்செட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.