Apple அறிமுகப்படுத்தவுள்ள மலிவு விலை 5G போன்!
Apple நிறுவனம் மிக விரைவில் மலிவான 5G ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய Apple iPhone SE-ல் 5G ஆப்ஷன் இல்லை. புதிய பதிப்பில் இந்த அம்சத்தையும் சேர்த்து அசத்தலான போனை நிறுவனம் வெளியிடும் என ஊகிக்கப்படுகின்றது.
இப்படி நடந்தால் பல ஆண்ட்ராய்டு பயனர்கள் Apple போன்களை நோக்கி வரக்கூடும்.
ப்ளூம்பெர்க் பத்திரிகையாளரும் நீண்டகால ஆப்பிள் டிராக்கருமான மார்க் குர்மன் தனது சமீபத்திய செய்திமடலில் iPhone SE 3 அறிமுகம் ஆகவுள்ளதாகத் தெரிவித்தார்.
மார்ச் அல்லது ஏப்ரல் 2022-ல் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் Apple நிறுவனத்தின் முதல் நிகழ்வின் போது இந்த கைபேசி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய போனின் பெயர் iPhone SE 3-ஆக இருக்குமா அல்லது iPhone SE 2022-ஆக இருக்குமா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
இந்தியாவில் iPhone SE 3 5G-யின் விலை எவ்வளவு இருக்கும்?
iPhone SE 3 பற்றிய மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், iPhone 12 மற்றும் iPhone 13 தொடர்களை விட மலிவான விலையில் 5G இணைப்பு அறிமுகம் ஆகிறது.
iPhone SE 3-ன் விலை சுமார் 400 டொலர் (ரூ. 29,531) அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், Apple iPhone SE 3 போன் அறிமுகம் ஆகும் வரை காத்திருந்து அதன் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்து, பின்னர் முடிவெடுப்பது நல்லது.
iPhone SE 3 5G பழைய வடிவமைப்பில் வரக்கூடும் iPhone SE-ன் முதல் பதிப்பு 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோன் எஸ்இ அதிக பணம் செலவழிக்க விரும்பாத பயனர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது iPhone 6S மற்றும் 6S Plus உடன் இயங்கும் மலிவான விருப்பமாகும். மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் iPhone SE 3 ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone SE 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு
இதில் 4.7-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் முன்பக்கத்தில் உள்ள டச் ஐடி பொத்தான் போன்ற ஐபோன் 8-க்கான வடிவமைப்பின் பெரும்பகுதி புதிய போனில் இருக்கும். இருப்பினும், இது ஐபோன் 8-ஐ விட அதிக சக்திவாய்ந்த கூறுகளுடன் உள்ளது.
இதில் வேகமான செயலி மற்றும் அதிக திறன் கொண்ட கமெரா உள்ளது. தற்போதைய SE ஃபோனில் 7MP ஃப்ரெண்ட்-ஃபேசிங்க் கேமரா மட்டுமே உள்ளது.
வரவிருக்கும் ஹெட்செட்டில் நைட் மோட், சினிமாடிக் மோட் மற்றும் ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைலுடன் 12MP சென்சார் பின்புற கமெரா ஆகியவை இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.
இந்த போனில் A15 பயோனிக் சிப் உடன் 3GB RAM தொகுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone தொடரைப் போல மற்றும் ஐபோன் 12 உடன் ஒத்துப்போகும் ஒரு கேமரா உள்ளது.
இது தவிர, iPhone SE 3 கைப்பேசியானது 128GB வரையிலான ஸ்டோரேஜ் பூஸ்டை பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022