iPhone SE 4: புதிய வசதிகளுடன் 2025ல் அறிமுகமாக வாய்ப்பு., கசிந்துள்ள தகவல்கள்
Apple நிறுவனத்தின் iPhone SE (2022) மொடலைத் தொடர்ந்து, iPhone SE 4 மாடல் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த முறை iPhone SE 4, பல முக்கிய அம்சங்களுடன் வந்திருக்கிறது.
வசதிகள் மற்றும் அம்சங்கள் (கசிந்த விவரங்கள்)
iPhone SE 4 மோதலில் 6.06 இன்ச் LTPS OLED திரை வழங்கப்படுவதுடன், 800 நிட்ஸ் பிரகாசம் கொண்டதாக இருக்கும். இது Samsung M11 OLED பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
Home Button இல்லாத முதல் SE மொடல் இது என்றும், Face ID ஆதரவு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மாடல் Apple A18 சிப்பில் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு இடத்துடன் வரும் இந்த போன், Apple-ன் முதல் in-house modem-ஐ (Centauri) கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Camera மற்றும் பேட்டரி
48MP Sony IMX904 சென்சார் கொண்ட Primary Camera மற்றும் 12MP TrueDepth Selfie Camera-வுடன் அறிமுகமாகும். 3,279mAh திறன் கொண்ட பாரிய பேட்டரியுடன், 20W USB-PD சார்ஜிங் மற்றும் 15W மாக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கலாம்.
விலை மற்றும் வெளியீட்டு திகதி
iPhone SE 4 மாடல் மார்ச் 2025ல் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதன் விலை $499 முதல் $549 வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple iPhone SE 4